Sunday 4 September 2011

NOTES ON- A CLOCKWORK ORANGE- A STANLEY KUBRICK FILM


எ க்ளாக் ஒர்க் ஆரஞ்ச்” - எனது பார்வையில்...

  • ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய “எ க்ளாக் ஒர்க் ஆரஞ்ச்” திரைப்படம் 1971 ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது அப்படத்தில் இடம்பெற்ற வன்முறைக் காட்சிப் படிமங்கள் Futuristic Method முறையில் அமைந்தாலும், யதார்த்தத்தின் மிக அருகாமையில் பார்வையாளர்களைக் கொண்டு சென்றன. மிகுந்த சர்ச்சைக்குரிய படமான இது பல விவாதங்களுக்கும் இட்டுச் சென்றது.
  • அறுபதுகளில் மிக பிரபலமாக இருந்த “ஹிப்பி” கலாச்சாரம் விடைபெற்று புதிதாக முறையற்ற செக்ஸ்,போதை,வன்முறை,ராக் இசை ஆகியன அன்றைய இளைஞர்களின் அடையாளங்களாக உருவெடுத்த எழுபதுகளின் காலகட்டம்; அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் சர்ச்சை பலரால் அறியப்பட்ட காலம்.
  • ஆனால் இச்சூழலின் அடிப்படையில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ் எழுத்தாளர் “அந்தோணி பர்க்ஸ்” எழுதிய ”க்ளாக் ஒர்க் ” என்ற நாவல் 1962 ல் வெளிவந்தது. அதன் அடிப்படையில் உருவான இப்படத்தின் திரைக்கதையை ஸ்டான்லி குப்ரிக் மே மாதம் 1970 ல் எழுதி முடித்தார்.
  • சுமார் பத்து வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட நினைத்தார் இயக்குநர். ஆனால் இப்படம் நிறைவடைய ஓராண்டுகாலம் ஆனது.
  • இப்படம் “அலெக்ஸ் டி லார்ஞ்ச்“ என்ற இளைஞனின் வன்முறை நிரம்பிய மூன்று காலகட்டங்களை மனோதத்துவ ரீதியில்,பீத்தோவனின் இசைப்பின்னணியில் சொன்னது. அலெக்ஸ் மற்றும் அவனது கூட்டாளிகளின் இரவு வாழ்க்கை பயணத்தின் ஊடாக இவர்கள் அரங்கேற்றும் வன்முறைகள், தொடர் பாலியல் வன்முறை....மற்றவர்களைத் துன்புறுத்தியே இன்பமடைந்த அலெக்ஸ் என்னும் பாத்திரத்தில் நடித்த மால்கம் மேக்டவல், இப்படத்தில் தான் நிகழ்த்தும் ஒவ்வொறு வன்செயலுக்கும் ஆடிப்பாடியே நடித்து, அந்த body language நடிப்பில் புதிய கோணத்தை அடைந்து புகழ் பெற்றார்.
  • இப்படத்தின் அடுத்த கட்டமாக, அலெக்ஸ் தான் செய்த குற்றங்களுக்காகக் கைது செய்யப்படுகிறான். அவனை அமைதியான மனநிலைக்குத் திருப்பLudorco Tecque பயிற்சி அளித்து சீர்திருத்த முயற்சிக்கிறார்கள்.
  • இதில் அவன் குணமடைந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்ற சூழலில், அச்சீர்திருத்த நாட்களில் அவனுடைய பழைய வாழ்க்கை முறையிலிருந்து மாறுபடுவதும், புதிய மாற்றத்திற்கு முற்றும் தயாராகாத மனநிலையும், குற்ற மனப்பான்மை, பழைய விரோதிகளை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதும், ஓர் எழுத்தாளரை சந்திக்கும்போது ஏற்படும் குழப்பமும் அதற்கு காரணமான அவர் மனைவியைக் கற்பழித்தது நினைவுகளில் மறையாததும் முடிவில் அலெக்ஸ் சீர்திருத்த "Ludorco cell"லிலிருந்து வெளிவந்து மறுபடியும் வன்முறை நாட்களை எதிர்கொள்வதுமாய் முடிகிறது “A Clockwork Orange”.
  • இப்படத்தை ஒளிப்பதிவு செய்த Jo Alcott இப்படத்தில் மூன்று பகுதிக்கும் மூன்று வேறுவிதமான Visual Narrative களை அமைத்திருந்தார்.
  • முதல் பகுதியான அலெக்ஸின் வன்முறைக் களியாட்டங்களில் - படர்ந்த ஒளி அமைப்பு (High Key Lighting) Zoom மற்றும் Dolly Movement டை அமைத்திருந்தார்.
  • இரண்டாம் பகுதியான அலெக்ஸின் சிறை வாழ்க்கையை அமைதியாக - ஓர் குறைந்த நீல நிறத்தன்மையோடு - Long takes உடன் சீரான காமிரா நகர்த்துதலை அமைத்திருந்தார்.
  • கடைசிப்பகுதியில் குறைந்த ஒளி(Lowkey)யமைப்புடன் கூடிய அடர்ந்த சூழலை கட்டமைத்திருந்தது இன்றும் கூட பல முன்னணி இயக்குநர்களை வியக்க வைக்கிற சினிமா மொழியாகும்.
  • A Clockwork Orange சுமார் 2 Million dollar தயாரிப்பில் 1970-71 ல் பெரும்பகுதி லண்டனில் “குப்ரிக்” வீட்டிலும் அதற்கு அருகாமையில் உள்ள வெளிப்புறத்திலும் படமாக்கப்பட்டன.
  • இயக்குநர் குப்ரிக் இப்படத்தில் நீண்டதொடர் Zoom Movement களைப் பயன்படுத்த நினைத்ததால் இப்படத்திற்காகவே புதிய லென்ஸ் வடிவமைக்கப்பட்டது. 20:1 Zoom lens பல காட்சிகள் வீட்டின் உட்புறத்தில் இயற்கையான வெளிச்சத்தில் படமாக்க மேலும் புதிய High Speed Lens (Lens FO.95) உருவாக்கப்பட்டது.
  • இதற்கு முன்னர் இருந்த Lens வகைகள் அதனுடைய Aperture F2.0 இதைப் பயன்படுத்தி இருந்தால் 200 சதவிகித அதிக வெளிச்சம் தேவைப்பட்டிருக்கும். அலெக்ஸ் கதாபாத்திரம் பழிவாங்கப்படும் இறுதிக்காட்சியில் 360 டிகிரிக்கு காமிரா சுழல வேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்த்ததால் காமிராமேன் ARRI II C காமிராவை Hand Held முறையில் பயன்படுத்தினார். கதாபாத்திரங்களின் அசைவுகளுக்கு ஏற்பப் பின் தொடரும் “Steadycam ” வகைக் காமிராக்கள் இல்லாத காலகட்டம்.
  • இப்படத்தின் எடிட்டிங்கைப் படத்தொகுப்பாளர் Bill Butler இயக்குநரின் Estate பங்களாவில் இரண்டு Steen Back எடிட்டிங் கருவிகளைக் கொண்டு - அதில் ஒன்று இயக்குநர் தொடர்ந்து ஃபிலிம் சுருளைப் பார்த்து shot செலக்‌ஷன் செய்வதற்கு. ஆனால் Final cut, Moviola கருவியைக் கொண்டே எடிட் செய்யப்பட்டது. முதலில் தினமும் பத்து மணி நேரம் எடிட்டிங் செய்யத் தொடங்கி இறுதியில் தினமும் பதினாறு மணி நேரம் வரை பணியாற்றினார்.
  • இப்படத்தின் இசையமைப்பாளர் Waltercarlos புதுமையான பின்னணி இசையைக் கவனத்துடன் பல இசை வடிவங்களை இணைத்து - குறிப்பாக Beethoven, Ross, Purcell ஆகியோரின் இசைக் குறிப்புகளைக் காட்சிக்கு ஏற்றவாறு இணைத்துப் பயன்படுத்தியிருந்தார். பின்னணி இசை மூலமாகவே படத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு எதிரான Counter point டை வைத்தார் குப்ரிக்.
  • இப்படத்தின் பின்னணி இசை மற்றும் மொத்த ஒலியை Stereo Sound ல் பதிவு செய்ய குப்ரிக் விரும்பாமல் Monotrack கிலேயே பதிவு செய்தார். பின்னர் Dolby(noise reduction)முறையில் பதிவு செய்யப்பட்டு வெளிவந்த முதல் திரைப்படம் இதுதான்.
  • அலெக்ஸ் எழுத்தாளரைத் தாக்கிவிட்டு அவர் மனைவியைக் கற்பழிக்கும் காட்சியில், எழுத்தாளரைத் தாக்கும்போது இயக்குநர் குப்ரிக் கதாநாயகன் MC- Dowell லை ஏதாவது ஒரு பாடலை முணுமுணுக்கும்படி சொல்ல, அவரோ தனக்கு "Sing in the rain" என்ற படத்தின் பாடல் மட்டுமே தெரியும் என்று கூற, அப்படத்தின் பாடலை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் $10,000 டாலர் 30 நொடிக்கு என்ற தகவலைத் தெரிந்து கொண்ட பின்னரும் அக்காட்சியில் கதாநாயகனை Sing in the rain படப்பாடலைப் பாடி நடிக்க வைத்தார் குப்ரிக்.
  • இப்படத்தைப் பார்த்த Motion Picture Association of America (இங்கே உள்ளCensor Board போல) "X" Rating வழங்கியது.
  • இப்படம் 1971 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் திரையிடப்பட்டு மிகப்பெரிய அளவில் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.
  • மேலும், சிறந்த இயக்கம், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என்று ஆகிய பிரிவுகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் New York film critics ன் சிறந்த படம் மற்றும் இயக்குநர் விருதைப் பெற்றது.
  • 1974 ம் ஆண்டுவாக்கில் பல சிறிய குற்றங்களுக்குக் காரணம் என்று ”எ க்ளாக் ஒர்க் ஆரஞ்ச்” திரைப்படம்மீது குற்றச்சாட்டுகள் பரவ ஆரம்பித்தன. ஸ்டேன்லி குப்ரிக் இப்படத்தைத் தானே தடைசெய்து இன்று வரை பொது மக்களுக்குத் திரையரங்குகளில் பார்க்க நிரந்தரத் தடையை விதித்தார்.

No comments:

Post a Comment