அசையும் படம்’ படித்துவிட்டு திரு. கே.வி.மணி அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடல்...
செம்மொழியிலொரு செறிவார்ந்த
செல்லுலாய்ட் குறிப்புகள்
இல்லையெனத் தவித்தோர்க்கு
தாய் கொடுத்த முதல்முத்தமாய்
தமிழில்வந்த முதல்புத்தகம்
தம்பியுன் ‘அசையும் படம்’
வாசித்து முடித்தபின்
வழிதவறிய ஆடுகளை
தோள்களில் சுமந்துவந்த
சுகம் எனக்கு...
இது
இவ்வூடக நெற்றியில் நீ இட்ட
ஆடகப் பொன்முத்திரை
இனி
தொடர்ந்தெழுது
அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து
உன்னை
பல்வேறு பரிமாணங்கட்கு
இட்டுச்செல்லும் சூரியஒளியே
இந்த துவக்கப்புள்ளி...
அரிய பல வெற்றிகளை
அள்ளிவர அண்ணனின் வாழ்த்துகள் கோடி!
மாறாத அன்போடு,
கே.வி.மணி
17.07.2011.
No comments:
Post a Comment