Thursday 29 December 2011

கோவைக்கு மின்சாரம் வந்தது சினிமாவால்...நன்றி “பேசும் படம்”



நாற்பதுகளில் வந்த ஒரு பழைய ”பேசும் படம்” இதழிலிருந்து...
1913 ல் திரு. வின்ஸென்ட் தமது சொந்த ஊராகிய கோயமுத்தூரில் முகாம் போட்டார். அதற்கு அடுத்த வருஷம் வெறைட்டி ஹால் கட்டப்பட்டுவிட்டது. இந்த தியேட்டர் தான் தென்னிந்தியாவிலேயே முதன் முதலாகக் கட்டப்பட்ட நிரந்தர சினிமா கொட்டகை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். 1927 ல் அமெரிக்காவில் படங்கள் பேசத்  தொடங்கிவிட்டன. 1929 ல் இம்மகத்தான மாறுதல் இந்தியாவுக்கு வந்துவிட்டது. 1930 ல் வெறைட்டி ஹாலில் பேசும் படங்கள் காண்பிக்க ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தென்னிந்தியாவில் முதன் முதலாக பேசும் படங்கள் காண்பிக்கப்பட்டது இந்தக் கொட்டகையில்தான். இதன் பிறகு தான் சென்னைக்கு பேசும் படங்கள் வந்தன.
கோவை நகரில் முதன் முதலாக பொது மக்களுக்கு மின்சாரம் கொடுத்ததும் திரு. வின்ஸென்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தமது சினிமாவுக்கென ஏற்படுத்திக்கொண்ட மின்சார வசதியை சிறுகச் சிறுக பெருக்கிக்கொண்டு சர்க்காரின் அனுமதி பெற்று நகருக்கு மின்சாரம் சப்ளை செய்து வந்தார்.

No comments:

Post a Comment