1888 - 1910 வரையிலான சினிமாவின் சில முக்கியமான வரலாற்றுப் பதிவுகள்
- உலகின் நவீன சினிமா காமிராவை லூயிஸ் லீ ப்ரின்ஸ் என்பவர் 1888 - ல் தயாரித்தார். அக்காமிரா இன்றும் இங்கிலாந்து நேஷனல் மியூசியத்தில் உள்ளது.
- 1889 - ல் ஜூன் 21-ல் வில்லியம் கிரிநீ "க்ரோனோஃபோட்டோக்கிராபிக்" காமிராவுக்கு காப்புரிமை பெற்றார். அதனுடைய எண் 10131 என்று அறிவித்தார்.
- ஜார்ஜ் டிமினி என்பவரால் 1893 -ல் 60 எம் எம் ஃபிலிம் பயன்படுத்தப்பட்டு "பீட்டர் மூவ்மெண்ட் காமிரா" கண்டுபிடிக்கப்பட்டது.
- லியோன் என்ற இடத்தில் 1894 -ல் லூமியர் மற்றும் சார்லஸ் மோரிசான் டாமிட்டர் என்ற காமிராவை வைத்து இன்று பிரபலமாக இருக்கும் 35 எம் எம் ஃபிலிமால் (பேப்பர் ) காட்சிகளைப் பதிவுசெய்தனர்.
- லூமியர் 1895 ஆண்டில் நியூயார்க் செலூலாய்ட் கம்பெனியில் - செலூலாய்ட் ஃபிலிமை வாங்கி காட்சிகளைப் பதிவு செய்தார்.
- ஷார்க்கி மற்றும் ஜெப்ஃப்ரீஸ் என்ற இரு குத்துச்சண்டை வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியை நான்கு மூவி காமிராக்கள் நானூறு விளக்குகள் கொண்டு படமாக்கிய நிகழ்ச்சியை "பிரிட்டிஷ் ஜர்னல்" ஒளிபரப்பியது. இதுவே அதிக நீளமான படக்காட்சியாக லண்டனில் அறிவிக்கப்பட்டது.
- தணிக்கை முறை முதன்முதலாக சிகாகோ நகரில் போலீசாரால் கொண்டுவரப்பட்டது.
- கட்டிட வல்லுநர் மாலோ வடிவமைத்த நிரந்தர சினிமா அரங்கம் பாரீசில் "விண்டர் சர்க்கஸ்" எனுமிடத்தில் உருவாக்கப்பட்டது.
- லூயிஸ் லூமியர் வண்ணப்படங்களை ப்ராஸஸ் செய்யும் முறைக்கேற்ப மூன்று வண்ண ஸ்க்ரீன் சிஸ்டத்தை உருவாக்கினார்.
- இங்கிலாந்தில் ”கினிமெத்தோகிராஃபர் ஃபிலிம் மேக்கர்ஸ் அசோசியேஷன்" உருவானது.
- முழுக்க முழுக்க உலோகத்தினாலான மூவி காமிராவை "பெல் அண்டு ஹோவல்" நிறுவனம் 1910- ல் தயாரித்தது.
- 1907 - ல் திரைப்படங்களில் காட்சிகளுக்கிடையே "டைட்டில் கார்டு" போடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1906 - ல் உலகின் முழு நீள திரைப்படமான ”ஸ்டோரி ஆஃப் தி கில்லி கேங்க்”எடுக்கப்பட்டது.
- திரையரங்குகளின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்தது. இத்தாலியில் 500 திரையரங்குகளும் இந்தியாவில் ஒரு திரையரங்கமும் உருவானது.
- யூகன்லாஸ்ட் தனது ஆப்டிகல் சவுண்டு ரெக்கார்டிங் அமைப்புக்காக காப்புரிமை பெற்றார்
No comments:
Post a Comment