Monday, 30 December 2013

Oviyar JEEVANATHAN REVIEW ON ''PIXEL'' - DIGITAL CINEMATOGRAPHY BOOK IN TAMIL



கலை சார்ந்த தொழில்நுட்ப நூல்கள் எப்போதும் எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. கடினமாகவும், வாசகனை மிரட்டும் தொனியிலேயே இருக்கும். ராஜ்குமாரின் ' அசையும் படம்' படித்தபோது கொஞ்சம் பயம் விலகியது இப்போது அவருடைய அடுத்த படைப்பான 'பிக்சல் ' கொஞ்ச நஞ்ச பயத்தையும் விரட்டிவிட்டது!!! திரைப்பட ஒளிப்பதிவு இப்போது டிஜிடல் யுகத்திற்குள் நுழைந்த நேரத்தில் டிஜிடல் ஒளிப்பதிவு மற்றும் அதன் கருவிகளை பற்றி மிக விரிவாக எழுத்தப்பட்ட நூல்!!

சினிமா ஒளிப்பதிவின் சரித்திர மணித்துளிகள் எனற படங்களுடன் உள்ள விவரக்குறிப்பும் சரி.. காமெர பாகங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விவரங்களும் சரி....மிக எளிமையான முறையில்...நமக்கு ஏற்படும் சின்ன சின்ன சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் முறையிலும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நூலை படித்து முடித்தவுடன், நானே எழுதியது போல ஒரு தற்பெருமை கொண்டேன்....என்ன இருந்தாலும் ராஜ்குமார் என் உடன் பிறவா சகோதரன் அல்லவா!! தன் ஓயாத திரைப்பட பணிகளுக்கிடையே, திரைப்பட தொழில் நுட்பங்களை மக்களிடம் கொண்டு செல்லும் அர்ப்பணிப்பும் உழைப்பும், போற்றத்தகுந்தவை!!! ஒவ்வொரு திரைப்பட ஆர்வலர்கள் கரங்களிலும் தவழ வேண்டிய நூல்...'பிக்சல்'!!!!

No comments:

Post a Comment