Saturday 12 October 2013

G R A V I T Y புதிய தொழில்நுட்ப சாதனை!


நேற்றிரவு படம் பார்த்த பிரமிப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பம் பிரத்தியேகமாக இப்படத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ் நான்கு வருட உழைப்பில் உருவாகியிருக்கும் பிரமிப்பூட்டும் அனுபவம் இது.

அண்டவெளியில் விபத்துக்குள்ளான ஒரு விண்வெளிக் கப்பலில் இருக்கும் இரு விஞ்ஞானிகளின் உயிர்ப் போராட்டத்தை இயக்குநர் Alfonso Cuaron ஒளிப்பதிவளார் Emmanuel Lubezki இருவரும் இணைந்து நாம் இதுவரை கண்டிராத புத்தம் புதிய தொழிநுட்பத்தில் படமாக்கி, உலக சினிமா வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்!

GRAVITY திரைப்படத்தில் இடம்பெறும் விண்வெளிக்காட்சிகளைப் படமாக்க புதிய ஒளியமைப்பு முறையைக் (Lighting Design) கையாண்டிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்கள் அண்டவெளியில் மிதப்பது மற்றும் அவர்களது உடல் அசைவுகளை படமாக்க பூட் & டாலி என்ற 500 கிலோ எடை கொண்ட கம்ப்யூட்டரால் இயங்கும் அதிநவீன ரோபோட் இயந்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இதில் காமிராவைப் பொருத்தி ஒரே நேரத்தில் அதிவேகத்துடன் 7 திசைகளுக்கு சுழற்ற முடியும். இதை பலமுறை ஒரே விதமாகவும் இயக்க முடியும்.

வழக்கமாக திரைப்படங்களில் பச்சை நிறப்பிண்னணியில் (Green Matte)படமாக்கி பின்னர் கம்ப்யூட்டர் யுக்தியுடன் background விண்வெளியில் நடப்பதுபோல் செய்வார்கள்.

இந்தப்படத்தில் 20 அடி உயரமும் 20 அடி அகலமும் கொண்ட  “வெளிச்ச அறை”  (Light Box) யை உருவாக்கி, அதன் நடுவே நடிகர்களை வைத்து படமாக்கியுள்ளார்கள். அந்த வெளிச்ச  அறையை LED லைட்களால் உருவாக்கியுள்ளார்கள். ஏறத்தாழ 4000க்கும் மேற்ப்பட்ட LED லைட்களில் 1,80,000 பல்புகள்! அதில் ஒவ்வொரு பல்பும் ஒரு பிக்சலாக கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தப்படுகிறது.



நடிகர்கள் வெளிச்ச அறையின் நடுவே சுற்ற...ராட்சஸ திரைகளில் படத்தில் இடம்பெறும் பேக்கிரவுண்ட் உருவாக்கப்பட்டு வெளிச்சமும் அதற்கேற்றவாறு அந்தப் பிண்னணியிலிருந்தே நடிகர்கள் மீது பாய்ச்சப்படுகிறது. நடிகர்கள் விண்வெளியில் மிதப்பது, சுழல்வது போன்ற உணர்வுகளை ஏற்படுத்த நடிகர்களுக்கு பதிலாக காமிரா சுழல்கிறது. அதேபோல வெளிச்ச மாறுதல்களும் அதற்கேற்ப புரோக்கிராம் செய்யப்படுகிறது.
இப்படத்தை “ஆரி அலெக்சா” காமிராவில் படமாக்கியுள்ளார்கள்!


No comments:

Post a Comment